உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

ரண்விமன வீடமைப்பு திட்டம்; பயனாளிகளுக்கு முதற்கட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!!!

-எம்.எஸ்.எம்.ஸாகிர்-

தேசிய வலுவூட்டல் மாதத்தினை குறிக்கும் வகையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ரண்விமன வீடமைப்பு  வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அரசியல் பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்தார்.

இந்த வேலைத்திட்டத்தில் 03 குடும்பங்களுக்கு பத்து இலட்சம் ரூபா பெறுமதியான 03 வீடுகள் அனுமதிக்கப்பட்டு, முதற்கட்டமாக மூன்று வீடுகளுக்கும் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் (350,000/-) பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆசிக் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,  சாய்ந்தமருது பிரதேச செயலக தலைமைப்பீட சமூர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.ரம்ஸான், சாய்ந்தமருது பிரதேச செயலக  முகாமைத்துவ பிரதம உத்தியோகத்தர் ஏ.சி. முஹம்மட், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் உட்பட சாய்ந்தமருது பிரதேச செயலக சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஜௌபர், சாய்ந்தமருது 02, 04, 17 ஆகிய பிரிவுகளுக்குரிய சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1067002

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time