காத்தான்குடி வாவியோர பற்றைக்காடுகளால் மக்கள் அவதி; இரவு நேரங்களில் பாதுகாப்பு கேள்விக்குறி.!!!
-எம்.ரி.எம்.யூனுஸ்-
காத்தான்குடி ஆற்றங்கரை மக்கள் குடியிருப்பு பகுதிக்கு அண்மையாக வாவியோரங்களில் பாரியளவில் பற்றைக்காடுகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் அச்சத்துடனும் சிரமத்துடனும் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக இரவு வேளைகளில் இப்பகுதியில் நடமாடும் பொதுமக்கள், முதலைகள் மற்றும் பல்வேறு விஷஜந்துக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையக்கூடும் என்ற அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வாவியோரமாக வளர்ந்துள்ள பற்றைக்காடுகளை உடனடியாக அகற்றி, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



