சவூதியை தாக்கினால் பதிலடி உறுதி: இஸ்ரேலுக்கு பாகிஸ்தான் விடுத்த எச்சரிக்கை.!!!
யேமனுடனான மோதல் சவூதி அரேபியாவையும் உள்ளடக்கும் வகையில் விரிவடைந்து, சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் செயல்படுத்தப்படலாம் என இஸ்ரேலுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுதி அரேபியாவின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் அணு ஆயுத திறன் கொண்ட நாடாக இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு பிராந்திய ரீதியில் கூடுதல் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இஸ்ரேல்–யேமன் உள்ளிட்ட பிராந்திய மோதல்கள் காரணமாக மத்திய கிழக்கில் பதற்ற நிலை மேலும் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.