உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

மட்டு. மாவட்டத்தில் அதிக வரட்சியினால் வற்றிவரும் குளங்கள்; குடிநீருக்கும் தட்டுப்பாடு.!!!

(ஜே.கே)

அதிக உஷனம் வரட்சியால் வற்றியுள்ள குளங்கள்: நீர்தாங்கிகள் மூலம் தினமும் 25000 லீற்றர் குடிநீர் வழங்க ஏற்பாடு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிக உஷ்னமான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் கிராமியக் குளங்கள் வற்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட பெரிய போரதீவு பெரிய குளம், கோவில் போரதீவுக் குளம், பொறுகாமம் குளம், வெல்லாவெளிக் குளம், உள்ளிட்ட பல பகுதிகளிலும் அமைந்துள்ள கிராமியக் குளங்கள் முற்றாக வற்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் கால்நடைகளும், நீர் தேடிச் செல்வதோடு, வற்றிய குளங்களில் அப்பகுதி மக்கள் மீன் பிடிப்பதையும், பறவைகள் இரைதேடி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

இது இவ்வாறு இருக்க கிராமங்களிலுள்ள கிணறுகளில் நீர் வற்றியுள்ளதனால் தாம் மக்களுக்கு நீர்தாங்கிகள் மூலம் இன்றிலிருந்து நாளாந்தம் சுமார் 250000 லீற்றர் குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளதாக போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066967

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time