சீரற்ற வானிலையால் கப்பல் விபத்து; 103 பேர் மீட்பு – 140 பேரைக் காணவில்லை.!!!
இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் சீரற்ற வானிலை காரணமாக 243 பயணிகளுடன் சென்ற “Virgo Transport 8” என்ற பயணிகள் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுரபயா நகரிலிருந்து பன்ஜர்மசின் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த குறித்த கப்பல், இன்று (13) காலை ஜாவா கடற்பகுதியில் காணாமல் போயிருந்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் போது கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதுடன், இதுவரை 103 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், மீட்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 140 பயணிகள் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடற்படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் இணைந்து காணாமல் போனவர்களைத் தேடும் பணியை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.