உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க.!!!

கிராமப்புற வீதி நிர்மாணம், குடிநீர் விநியோகம் மற்றும் திடக்கழிவுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (20) நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான நீர் வழங்கல் திட்டங்கள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இணைந்து கலந்துரையாடி விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மேலும், இவ்விடயங்களை ஆராய்வதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை இப்பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பாரிய அளவிலான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் வரை பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தற்காலிக அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

அத்துடன், நீர் வழங்கல் சபையினால் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களுக்கும் தேவையான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, மாவட்டத்தில் வீதிகள் மற்றும் பாலங்கள் அமைக்கும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீதிகளினதும் நிர்மாணப் பணிகளை இவ்வருடத்திற்குள் ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மாவட்டத்தின் காணி பிரச்சினைகள், வனவிலங்கு திணைக்களத்தின் கீழ் உள்ள மேய்ச்சல் தரைகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை குறித்தும் இக்கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.

கிழக்கு மாகாண மீன்பிடித் தொழிலின் மையமாக விளங்கும் வாழைச்சேனை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் அதற்கான கலங்கரை விளக்கம் அமைப்பதற்கான தேவையும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டு முன்னேற்பாடுகள், யானை – மனித மோதலைக் குறைக்கும் திட்டங்கள், சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் மீளாய்வு செய்யப்பட்டன.

‘டித்வா’ சூறாவளியால் சேதமடைந்த வயல் நிலங்களுக்கான இழப்பீடு வழங்கும் திட்டம், வீடுகளுக்கான சேதஈடு மற்றும் புதிய வீடமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி ஆராய

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 871476

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time