கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்க விசேட குழு நியமனம்
சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க அரசு நடவடிக்கை. !!!
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகள், முறையற்ற காணி நிரப்புதல்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத கட்டுமானங்களைத் தடுக்கும் நோக்கில், அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய, கிழக்கு மாகாணத்தின் காணி வளங்களையும் இயற்கைச் சூழலையும் பாதுகாப்பதற்காக “கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல்” என்ற பெயரில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதற்காக விசேட பொலிஸ் அலகொன்றை நிறுவுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட விசேட யோசனைக்கு அமைவாக அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
தென் மாகாண முன்னாள் காணி ஆணையாளரும், தற்போதைய தென் மாகாண உள்ளூராட்சி ஆணையாளருமான சேனக பல்லியகுருகே தலைமையில் இந்த விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் சமூக அமைப்பை கருத்திற்கொண்டு, அனைத்து சமூகங்களின் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்தும் வகையில், தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு அரச நிறுவனங்களின் அதிகாரிகள் குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குழுவின் தலைவர்:
சேனக பல்லியகுருகே
உள்ளூராட்சி ஆணையாளர் – தென் மாகாணம்
குழு உறுப்பினர்கள்:
– பி.பி. கஸ்தூரியாரச்சி – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், அம்பாறை பிரிவு
– வளர்மதி ரவீந்திரன் – மாகாண காணி ஆணையாளர், கிழக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களம்
– ஏ.டி.எம். ரஃபீ – மாநகரசபை ஆணையாளர், கல்முனை மாநகரசபை
– வசந்த லியனகே – பிரதி வனப் பாதுகாவலர், வடக்கு/கிழக்கு மாகாணம்
– ஹெஷானி சோமரத்ன – உதவிப் பணிப்பாளர், வனஜீவிகள் பாதுகாப்புத் திணைக்களம்
– பஞ்சாலி பெர்னாண்டோ – சட்ட அதிகாரி, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம்
– அனுஷன் முனசிங்க – பிராந்திய உதவிப் பணிப்பாளர், தொல்பொருள் திணைக்களம்
– ஐ.எம். உபயகல்யாண – வதிவிட நிறுவன முகாமையாளர், இலங்கை மகாவலி அதிகாரசபை
– எஸ். பரமேஸ்வரன் – பிராந்திய உதவிப் பணிப்பாளர், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு
– ஜி.ஆர்.எல். பெரேரா – சிரேஷ்ட அளவை அத்தியட்சகர், அளவைத் திணைக்களம்
– எம்.எச்.எம். மஹீர் – கனிஷ்ட முகாமையாளர், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (பாசிக்குடா)
கிழக்கு மாகாணத்தின் காணி வளங்களை பாதுகாத்தல், இயற்கைச் சூழலை காப்பாற்றல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் ஆகியவை இந்த விசேட குழுவின் முக்கிய பொறுப்புகளாகும்.
