உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

இலங்கை தொடரை இழந்தது – பாகிஸ்தான்  3–0 என அபார வெற்றி.!!!

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 211 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் சதீர சமரவிக்ரம அதிகபட்சமாக 48 ஓட்டங்களையும், அணித்தலைவர் குஸல் மென்டிஸ் 34 ஓட்டங்களையும், பவான் ரத்நாயக்க 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் வஸீம் 03 விக்கெட்டுக்களையும், ஹரீஸ் ரவூப் மற்றும் ஃபைசல் அக்ரம் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்படி 212 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 61 ஓட்டங்களையும், ஃபகார் சமான் 55 ஓட்டங்களையும் ஹுசைன் தலத் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் ஜெஃப்ரி வாண்டர்சே 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கை அணியை வௌ்ளையடிப்பு செய்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 929150

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time