உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

மட்டக்களப்பு நகரில் தனியார் வங்கியில் திடீர் தீப்பரவல் – அதிகாலை சம்பவத்தால் பரபரப்பு.!!!

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி கிளை ஒன்றில் இன்று (30) அதிகாலை திடீரென ஏற்பட்ட தீப்பரவலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இன்று காலை சுமார் 6.00 மணியளவில் வங்கி வளாகத்திலிருந்து கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் வெளிவருவதை அவதானித்த பொதுமக்களும் பாதுகாப்புப் பிரிவினரும் உடனடியாக தீயணைப்புப் பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு, கடுமையான முயற்சியின் பின்னர் தீப்பரவலை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவம் அதிகாலை நேரத்தில் இடம்பெற்றதால் வங்கியில் ஊழியர்களோ வாடிக்கையாளர்களோ எவரும் இருக்காத காரணத்தால் உயிர்ச்சேதங்கள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சார ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகிக்கப்படுகின்றது.

தீப்பரவலால் ஏற்பட்ட சொத்துச் சேதத்தின் அளவு தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066825

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time