ஈதுல் அழ்ஹா பெருநாள் தொழுகையில்: காத்தான்குடி கடற்கரை திடலில் திரண்ட பெருந்திரளான மக்கள்.!!!
-எம்.ரி.எம்.யூனுஸ்-
காத்தான்குடி பிரதேசத்தில் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை இன்று (28) காலை அன்வர் பள்ளி கடற்கரை முன்றலில் இஸ்லாமிக் சென்டர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
பெருநாள் தொழுகையையும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மார்க்கச் சொற்பொழிவையும் அல் ஹாபிழ் மெளலவி எம்.ஏ.காலிதீன் பலாஹி ஜலீல் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, உலக சமாதானத்திற்கும் நலன்களுக்கும் இறைவனைப் பிரார்த்தித்தனர்.
தொழுகையைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஈத் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதுடன், சமூக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வுகளையும் வெளிப்படுத்தினர்.
பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








