உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

சுற்றுலா விமானம் விபத்து – 11 பேர் பலி.!!!

கென்யாவின் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட துயரமான விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கென்யா சிவில் விமான அதிகாரிகளின் தகவலின்படி, பிரபலமான Diani கடற்கரை விடுதியில் இருந்து Maasai Mara வனப்பகுதிக்கு புறப்பட்டுச் சென்ற சுற்றுலா விமானம், இன்று காலை உள்ளூர் நேரப்படி 5.30 மணிக்கு (GMT 2.30) விபத்துக்குள்ளானது.

Mombasa Air Safari நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானத்தில், 8 ஹங்கேரியர்கள், 2 ஜெர்மனியர்கள் மற்றும் 1 கென்யா பைலட் பயணம் செய்திருந்தனர். இவர்களில் யாரும் உயிர் தப்பவில்லை என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான முழு ஆதரவை வழங்குவது எங்கள் முதன்மை கடமை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் தீப்பற்றி எரிந்த விமானம் மற்றும் சிதறிய பாகங்களின் புகைப்படங்கள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810067

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time