இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 297 கிலோ கஞ்சா சிக்கியது; இருவர் அதிரடியாக கைது.!!!
இலங்கைக்கு கடல் வழியாகக் கடத்துவதற்காக வேனில் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் 297 கிலோ கஞ்சா தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், பிரப்பன்வலசை கடற்கரைப் பகுதியில் இன்று (8) காவல்துறையினரால் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிரப்பன்வலசை கடற்கரைப் பகுதி வழியாகப் படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் தீவிர சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, இலங்கைக்கு கடத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டிருந்த 297 கிலோ கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 670 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களின் சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


