உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

குவைட்டில் அமெரிக்க போர் விமானம் விபத்து – விமானி பாதுகாப்பாக மீட்பு.!!!

குவைட்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் விமானப்படைக்கு சொந்தமான F-15E Strike Eagle போர் விமானம் ஒன்று இன்று (02) காலை விபத்துக்குள்ளானதாக ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில வெளிநாட்டு ஊடகங்கள், குறித்த விமானம் தொழில்நுட்ப கோளாறால் வீழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கின்றன. அதேவேளை, மற்ற தகவல்கள் வெளிப்புற தாக்குதல் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றன. எனினும், இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

விபத்துக்குப் பின்னர் விமானத்தில் இருந்த அமெரிக்க விமானி பாதுகாப்பு பரசூட் மூலம் குதித்து உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தரையில் இறங்கிய அவரை அப்பகுதியில் இருந்த சிலர் சூழ்ந்து தாக்க முயன்றதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளிகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதைத் தொடர்ந்து, குவைட் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விமானியை பாதுகாப்பாக மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவத்துக்கான காட்சிகள் மற்றும் வீடியோக்கள் அரபு ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810893

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time