உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 4, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

வைரலான குழந்தை மீதான தாக்குதல் காணொளி: பெண் கைது; வைத்தியசாலையில் குழந்தை.!!!

சமூக வலைத்தளங்களில் குழந்தை ஒன்று தாக்கப்படும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த காணொளி கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட பெண்ணும், தாக்குதலுக்கு உள்ளான குழந்தையும் மேலதிக விசாரணைகளுக்காக கறுவாத்தோட்டம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழந்தை மீதான தாக்குதல் கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1291845

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time