மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் விநியோகம் மட்டுப்படும்; மக்களுக்கு அவசர அறிவிப்பு.!!!
• உண்ணிச்சை நீர் விநியோக பம்பில் ஏற்பட்ட பழுது காரணமாக ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் திகதி வரை பாதிப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உண்ணிச்சை நீர் விநியோக பம்பில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக தற்போது திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக ஆகஸ்ட் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நீர் விநியோகம் தடைப்படவோ அல்லது மட்டுப்படுத்தப்படவோ கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களுக்குக் கிடைக்கும் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நீர் விநியோகத்தை சீரமைப்பதற்கான திருத்தப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு பொதுமக்களிடம் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீரைச் சேமிப்போம்; நெருக்கடியைத் தவிர்ப்போம்!