உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260921-WA0076
“மாற்றம்” என்ற மக்கள் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகள்; சாதனைகள், சவால்கள், மக்கள் எதிர்பார்ப்புகள் என்ன?!!!
IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!

Share :

சீன ஜனாதிபதிக்கு வெள்ளை மாளிகையில் பிரமாண்ட அரச விருந்து.!!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கை நேற்று (24) வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அரச விஜயத்திற்காக வரவேற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ட்ரம்ப் மற்றும் சி ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களும் தத்தமது துணைவியார்களுடன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அரச விருந்தில் கலந்துகொண்டனர்.

இந்த அரச விருந்தில் அமெரிக்கா மற்றும் சீனாவைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள், வர்த்தகத் துறை பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இரு தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு, தைவான் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்கா–சீனா உறவுகள் தொடர்பில் இரு தலைவர்களும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1185253

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time