உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 4, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

இஸ்ரேல் தேர்தல் முடிவுகளைச் சட்டவிரோதமாக்க நெதன்யாகு முயற்சி: எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு.!!!

இஸ்ரேலில் நடைபெற்ற தேர்தலில் தனது கூட்டணி பெரும்பான்மையைப் பெறத் தவறியதைத் தொடர்ந்து, வெளிநாட்டுத் தலையீடு இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், அரபுக் கட்சிகள் தேர்தலைத் திருடிவிட்டதாக நெதன்யாகுவின் லிகூட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளமையும் இஸ்ரேலிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, அரபுக் கட்சிகள் கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிடமிருந்து சட்டவிரோத நிதியுதவிகளைப் பெற்றனவா என்பது தொடர்பில் இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட் (Shin Bet) விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ள கட்டார் வெளியுறவு அமைச்சகம், அவை ஆதாரமற்றவை மற்றும் ஆபத்தானவை எனத் தெரிவித்துள்ளதுடன், கட்டாருக்கு எதிராக இஸ்ரேலிய அரசியல்வாதிகள் தவறான பிரசாரங்களை முன்னெடுப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

இறுதி தேர்தல் முடிவுகளின்படி, நெதன்யாகுவின் கூட்டணிக்கோ அல்லது யூத எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கோ 120 உறுப்பினர்களைக் கொண்ட நெசெட் (Knesset) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், அரபு வாக்காளர்களின் வாக்குப்பதிவு அதிகரித்ததைத் தொடர்ந்து, கூட்டுப் பட்டியல் (Joint List) மற்றும் ரஃஆம் (Ra’am) ஆகிய இரு அரபுக் கட்சிகளும் இணைந்து 19 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. இது எதிர்பார்ப்புகளை மீறிய தேர்தல் வெற்றியாகக் கருதப்படுகிறது.

இதன்படி, நெதன்யாகுவின் கூட்டணி 53 ஆசனங்களையும், அவருக்கு எதிரான காடி ஐசன்கோட்டின் கூட்டணி 48 ஆசனங்களையும் பெற்றுள்ளன. அரபுக் கட்சிகளின் 19 ஆசனங்களும் ஆட்சியமைப்பதைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக மாறியுள்ளன.

வெளிநாட்டுத் தலையீடு தொடர்பில் கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளதாக மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஷின் பெட் பாதுகாப்புச் சேவையிடம் விசாரணை நடத்தக் கோரியதைத் தொடர்ந்து, அரபுக் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டதாக நெதன்யாகுவின் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை இரு அரபுக் கட்சிகளும் உறுதியாக மறுத்துள்ளன. கூட்டுப் பட்டியல் கூட்டணியும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை எனத் தெரிவித்துள்ளது.

அரபுக் கட்சிகளைச் சட்டவிரோதமானவையாகச் சித்தரிப்பதன் மூலம், அவற்றுடன் கைகோர்த்து ஆட்சியமைப்பதற்கு காடி ஐசன்கோட் முன்வருவதை அரசியல் ரீதியாகச் சிக்கலாக்கும் முயற்சியாகவே நெதன்யாகுவின் நடவடிக்கைகள் பார்க்கப்படுவதாக அவரது விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, அரபு சமூகங்களின் வாக்குப்பதிவை அதிகரிப்பதற்காகக் கட்டார் நிதியுதவி வழங்கியதாக மத்திய தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இக்குற்றச்சாட்டுகளை கட்டார் வெளியுறவு அமைச்சகம் முற்றாக நிராகரித்துள்ளது.

இந்த விவகாரத்தை அரசியல் நிலநடுக்கம் என வர்ணித்துள்ள நெதன்யாகுவும் அவரது லிகூட் கட்சியும், தமது வலதுசாரி அரசாங்கத்தை அகற்றுவதற்கான முயற்சியாகவும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகவும் இதனைச் சித்தரித்துள்ளனர்.

ஆனால், சட்டபூர்வமாக வாக்களித்த ஒட்டுமொத்த அரபு சமூகத்தையும் விசாரணையின் இலக்காகக் கொண்டிருக்கவில்லை என ஷின் பெட் பின்னர் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், தேர்தல் நேர்மையில் முறையான மீறல்கள் இடம்பெற்றதற்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என மத்திய தேர்தல் ஆணையத்தின் தற்காலிகப் பணிப்பாளர் நாயகம் டீன் லிவ்னே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பான சர்ச்சைகளும் ஆட்சியமைப்பதற்கான அரசியல் நகர்வுகளும் இஸ்ரேலின் அரசியல் களத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1292515

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time