உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

அல் அக்ஸா வட்டாரத்தில் துரித அபிவிருத்திப் பணிகள் – நகரசபை உறுப்பினர் ஜவாஹிர் நேரடி மேற்பார்வை.!!!

காத்தான்குடி அல் அக்ஸா வட்டாரத்தில் வடிகான்களை சுத்தம் செய்தல் மற்றும் அவற்றிற்கு மூடிகள் பொருத்தும் அபிவிருத்திப் பணிகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வட்டார நகரசபை உறுப்பினர் எம்.ஐ.எம். ஜவாஹிரின் நேரடி வழிகாட்டலிலும் மேற்பார்வையிலும் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த இந்த வேலைத்திட்டம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு, மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய நீர் தேக்கம் மற்றும் சுகாதார பிரச்சினைகளைத் தடுக்கும் நோக்கில் இந்த விசேட அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நடைபெற்று வரும் வடிகான் திருத்தப் பணிகளும் அவற்றிற்கு மூடிகள் அமைக்கும் வேலைத்திட்டங்களும் இன்னும் சில நாட்களில் முழுமையாக நிறைவு செய்யப்படவுள்ளதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அல் அக்ஸா வட்டார மக்களின் நீண்டகால கோரிக்கையை கருத்தில் கொண்டு, நீண்ட காலமாக பழுதடைந்திருந்த வீதி மின்விளக்குகள் அனைத்தும் முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் அல் அக்ஸா வட்டாரம் தற்போது முழுமையாக ஒளியூட்டப்பட்டு, இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சமின்றி நடமாடுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நகரசபை உறுப்பினர் ஜவாஹிர் மேற்கொண்டுள்ள இந்த துரிதகதி நடவடிக்கைகள் தொடர்பில் வட்டார மக்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066743

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time