மட்டக்களப்பில் நாளை 8 மணிநேர மின்வெட்டு: மின்சார சபை அறிவிப்பு.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (29) எட்டு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மின்வெட்டு நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை வெளியிட்ட தகவலின்படி, புன்னைச்சோலை பகுதிக்கு மின்னிணைப்பு கொண்டு செல்லும் பகுதிகள் மற்றும் புன்னைச்சோலையினூடாக மின் இணைப்பு கடந்து செல்லும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
இந்த மின்வெட்டு தொடர்பான தகவல்கள் அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்கூட்டியே குறுஞ்செய்தி (SMS) மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பராமரிப்பு பணிகளை விரைவாக நிறைவு செய்து வழக்கமான மின்விநியோகத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.