போரைத் தேர்ந்தெடுத்த அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பதில் காத்திருக்கிறது – ஈரான் உயர் தலைவர்.!!!
அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஒப்பந்தமும், அதில் இடப்படும் கையெழுத்தும் எந்த மதிப்பும் அற்றவை என்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாக ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
நேற்று (18) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அமெரிக்கா தற்போது போரைத் தேர்ந்தெடுத்துள்ளது. அதற்கான மறக்க முடியாத பாடங்கள் ஈரானிடமும் எதிர்ப்பு முன்னணியிடமும் இருந்து வழங்கப்படும்” என எச்சரித்துள்ளார்.
மேலும், நாட்டின் நல்வாழ்வு மற்றும் செழுமையைப் பாதுகாக்கும் நோக்கில் அரசின் மூன்று பிரிவுகளிலும் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகள் மீது மக்கள் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்லாமியக் குடியரசான ஈரானின் தேசிய நலன்களைப் பாதுகாக்க அனைவரும் விழிப்புடனும் செயலூக்கத்துடனும் இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், எதிரி தரப்பினர் எந்தவிதமான பலவீனத்தின் அறிகுறிகளையும் காண அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
“நாம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முழுமையாகக் கடைப்பிடித்தால், எதிரி நிச்சயமாகத் தோற்கடிக்கப்படுவான்” என்றும் ஈரானின் உயர் தலைவர் தனது அறிக்கையில் உறுதிபட தெரிவித்துள்ளார்.