உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260727-WA0030
டெங்கு: எண்களைத் தாண்டி எழும் தேசிய அவசரநிலை.!!!
IMG-20260719-WA0026
பொருளாதாரத்தை பாதுகாக்க வரி கண்காணிப்பு தீவிரம்: தவிர்ப்போருக்கு சட்ட நடவடிக்கை ஏன்? எதற்கு???

Share :

அமெரிக்கா மீது குற்றச்சாட்டு; இஸ்லாமாபாத் ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் பின்வாங்கல்.!!!

அமெரிக்கா தனது ஒப்பந்தக் கடப்பாடுகளை மீறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஈரான், இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் தாம் மேற்கொண்டிருந்த அனைத்து கடப்பாடுகளையும் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை ஈரானின் வெளியுறவு பிரதி அமைச்சர் காசெம் கரிபாபாடி வெளியிட்டுள்ளதாக, அந்நாட்டு பார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கட்டமைப்பின் கீழ் அமெரிக்கா தனது அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றத் தவறியதுடன், ஒப்பந்தக் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்தாமல் நிறுத்திவைத்துள்ளதாக காசெம் கரிபாபாடி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அமெரிக்காவின் தொடர்ச்சியான தாக்குதல் நடவடிக்கைகள் மற்றும் ஒப்பந்த மீறல்களே, இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் மேற்கொண்டிருந்த கடப்பாடுகளையும் அதன் அமலாக்கத்தையும் தற்காலிகமாக இடைநிறுத்தும் முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு, அமெரிக்கா–ஈரான் உறவுகளில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1010649

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time