அமெரிக்கா–ஈரான் அமைதி சமிக்ஞை; சர்வதேச எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்.!!!
அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரத் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, கடந்த வியாழக்கிழமை ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியிருந்த பிரென்ட் (Brent) ரக மசகு எண்ணெயின் விலை, தற்போது 92 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளது.
அதேவேளை, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெயின் விலையும் தொடர்ந்து சரிவைச் சந்தித்துள்ள நிலையில், ஒரு பீப்பாயின் விலை 85 அமெரிக்க டொலர்களுக்கும் கீழ் பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவிய பதற்றம் தற்காலிகமாக தணிந்துள்ளதால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகள் குறித்த முதலீட்டாளர்களின் அச்சம் தளர்ந்ததே இந்த விலைச் சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
சர்வதேச அரசியல் சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எண்ணெய் உற்பத்தி தொடர்பான எதிர்கால முடிவுகள், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையின் அடுத்தகட்ட போக்கை தீர்மானிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.