உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸாருக்கான: தொழில்நுட்ப பாலியல் வன்முறை விழிப்புணர்வு பயிற்சி.!!!

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்றும் இன்றும் காத்தான்குடி ஹோட்டல் பீச் வே (Hotel Beachwa) இல் நடைபெற்றது.

சமத்துவத்திற்கும் நீதிக்குமான நிலையம் (CEJ) நடாத்திய இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம் (IWARE) நிறுவனம் ஒழுங்கு செய்து நடத்தியது.

தொழில்நுட்பம் சார்ந்த பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தொடர்பான இக்கருத்தரங்கில் சட்டத்தரணி ராதிகா குணரத்தின அவர்கள் வளவாளராகக் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார்.

சமூக வலைத்தளங்கள் வாயிலாக பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உரிய முறையில் சேவைகளை வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இப்பயிற்சியில் சுமார் 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 811041

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time