உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

காத்தான்குடி பொலிஸின் ஏற்பாட்டில் “Clean Sri Lanka” வேலைத்திட்டம்: கல்லடி கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுப்பு.!!!

— பீ.எம். பயாஸ் –

காத்தான்குடி பொலிஸ் நிலையம் மற்றும பொலிஸ் உபதேசக் குழுவின் ஏற்பாட்டில் “Clean Sri Lanka” வேலைத்திட்டத்தின் கீழ் கல்லடி கடற்கரையை சுத்தப்படுத்தும் சிறப்பு வேலைத்திட்டம் இன்று (11) சனிக்கிழமை காலை நடைபெற்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.என். அழகக்கோன் (IP) அவர்களின் வழிகாட்டுதலில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்று கடற்கரைப் பகுதியின் பெரும் பரப்பளவு சுத்தப்படுத்தப்பட்டது.

மேலும், காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நந்தன (IP), மாவட்ட பொதுமக்கள் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பஸ்நாயக்க (CI), மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டார (CI), சிவில் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரி ஜெயசேக்கர (SI), பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ரஹீம் (SI) உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனுடன், பொலிஸ் உபதேசக்குழு செயலாளர் B.M. பயாஸ், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இணைந்து கடற்கரைப் பகுதியை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த வேலைத்திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களிடையே சுத்தம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 811043

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time