மருத்துவர்களின் பற்றுச் சீட்டு இன்றி மருந்துகள் வழங்க வேண்டாம் – காத்தான்குடியில் விழிப்புணர்வு நடவடிக்கை.!!!
அரசாங்கத்தின் தேசிய போதை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், மருத்துவர்களின் பற்றுச் சீட்டு இன்றி மருந்துகள் மற்றும் மாத்திரைகள் விநியோகம் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் காத்தான்குடியில் அமைந்துள்ள தனியார் மருந்தகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையை காத்தான்குடி பொலிஸார், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவை இணைந்து மேற்கொண்டன.
இதன் போது மருந்தகங்களில் விழிப்புணர்வு பதாதைகள் ஒட்டப்பட்டதுடன், தொடர்புடைய துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
மேலும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மருந்தக உரிமையாளர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன், மருந்துகள் வழங்கும் போது அரசாங்கம் வகுத்துள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

















