பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 28 மாணவர்களுக்கு: அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் கௌரவிப்பு நிகழ்வு.!!!
-எம்.எச்.எம். அன்வர்-
காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 28 மாணவர்களை கௌரவித்து வரவேற்கும் நிகழ்வு இன்று (10) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம். பீ. எம். றபீக் (SLPS) தலைமையில், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கௌரவிப்பினை வழங்கினார்.
மேலும், நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலாளருக்கு பாடசாலை நிர்வாகம் சார்பாக அவர்களின் சேவையை பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.
அதேவேளை மாணவர்களின் கலை நிகழ்வுகள், கவிதை வாசிப்பு மற்றும் வரவேற்பு பாடல்களும் இடம்பெற்றன.
நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் எம். பாயிஸ், பிரதி அதிபர் றியாழ், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் ஜெமஸ்த் அறபாத், மற்றும் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை பெற்றோர்கள் மாலை அணிவித்து கௌரவித்ததும் இந்நிகழ்வின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.






























