உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

நைஜீரிய தேவாலயத்தில் ஆராதனையின் போது குண்டுவெடிப்பு – 5 பேர் பலி, 35 பேர் காயம்.!!!

நைஜீரியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 35 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகிழக்கு நைஜீரியாவின் மைதுகுரி (Maiduguri) நகரில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில், பக்தர்கள் மாலை நேர ஆராதனையில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த குண்டுவெடிப்பு, நைஜீரிய நேரப்படி நேற்று (24) மாலை 6.00 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திலிருந்து தற்கொலை குண்டுதாரியின் அங்கி (Suicide Vest) ஒன்றின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதால், இது தற்கொலை குண்டுத் தாக்குதலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 809948

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time