உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

இந்தியன் லீக் போட்டிகள்; மீண்டும் ஆரம்பம்.!!!

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக நிறுத்தப்பட்ட இந்தியன் லீக் போட்டிகள் மீண்டும் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ட்ரோன் தாக்குதலால் பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி மே 24 ஆம் திகதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.

நிறுத்தம் செய்யப்பட்ட ஓவர்களில் இருந்து இந்த போட்டி தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

ப்ளே ஆஃப் சுற்றுகளையும் சேர்த்து மொத்தம் இன்னும் 17 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இவை பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய 6 இடங்களில் மட்டுமே நடைபெறும்.இதில் எந்த போட்டியும் சேப்பாக்கத்தில் நடைபெறாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ப்ளே ஆஃப் சுற்றை பொறுத்தவரையில் தகுதிகாண் போட்டி 1 – மே 29 எலிமினேட்டர் – மே 30 தகுதிகாண் போட்டி 2 – ஜூன் 1 இறுதிப் போட்டி – ஜூன் 3 ஆம் திகதி முறையே நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214807

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time