உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

அமெரிக்கா நுழைவு தடை பட்டியலில் மேலும் 6 நாடுகள் – பயணக் கட்டுப்பாடுகள் 39 நாடுகளாக உயர்வு.!!!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மேலும் ஆறு நாடுகளைச் சேர்த்துள்ளார்.

இதன்படி பாலஸ்தீனம், சிரியா, பர்கினா பாசோ, மாலி, நைஜர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் நோக்கம், “வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்” மற்றும் பிற பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவை பாதுகாப்பது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (16) கையெழுத்திடப்பட்ட புதிய பிரகடனத்தின் மூலம், முழுமையான அல்லது பகுதியளவு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 19 இலிருந்து 39 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் தீர்மானம் மனித உரிமை அமைப்புகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், உலக அரசியல் அரங்கில் இதன் தாக்கம் தொடர்பாக விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 809961

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time