உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

கால்களை அழுத்தி விடச் சொன்ன ஆசிரியை: சர்ச்சையை கிளப்பிய வைரல் வீடியோ.!!!

பாடசாலையில் ஆசிரியை ஒருவர் தொலைபேசியில் உரையாடியபடி நாற்காலியில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டிருக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டம், முள்ளைய்ய பூடி மண்டலம், பண்டபல்லி எனும் கிராமத்தில் கிரிஜன ஆசிரம அரசு மகளிர் பாடசாலை உள்ளது. இங்கு நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்பாடசாலையில் பணியாற்றும் சுஜாதா எனும் ஆசிரியை, பாடத்தை கற்பிக்க வேண்டிய வேளையில் இரண்டு மாணவிகளை அழைத்து, கால்களை பிடித்து அழுத்தி விடச் செய்துள்ளார்.

அப்போது அந்த ஆசிரியை செல்போனில் பேசிக்கொண்டு நாற்காலியில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டிருக்கும் ஒரு வீடியோ கடந்த 02 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

இதனை பார்த்த பெற்றோர்கள் பலர் குறித்த ஆசிரியையின் செயலை கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த ஆசிரியையை ஸ்ரீகாகுளம் மாவட்ட கல்வித் துறை அதிகாரி ஜெகன்னாத் நேற்று (05) சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1065310

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time