குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு; மெட்டாவுக்கு ரூ.5,404 கோடி இழப்பீடு உத்தரவு.!!!
குழந்தைகளின் மனநலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், நிறுவனத்திற்கு சுமார் ரூ.5,404 கோடி இழப்பீடு வழங்குமாறு நியூ மெக்சிகோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்பட்டதுடன், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் தொடர்பான சம்பவங்களை நிறுவனம் மூடி மறைத்ததாகக் குற்றம் சாட்டி நியூ மெக்சிகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், கடந்த மார்ச் மாதம் நிறுவனத்திற்கு ரூ.3,574 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், வழக்கின் இரண்டாம் கட்டத் தீர்ப்பு நேற்று (6) வெளியிடப்பட்டது.
அதன்படி, தனது சமூக வலைத்தளங்களால் குழந்தைகளுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் பாதிப்புகளுக்கான இழப்பீடாக சுமார் ரூ.5,404 கோடியை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கம் தொடர்பில் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.