உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

விமானத்தில் பிறந்த குழந்தை – 153 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் 154 பயணிகளுடன் தரையிறங்கியது.!!!

அமெரிக்காவில் இருந்து ஓரிகான் மாநிலம் நோக்கிச் சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அட்லாண்டாவிலிருந்து போர்ட்லேண்ட் விமான நிலையம் நோக்கிச் சென்ற குறித்த விமானம் 153 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்தது. விமானம் போர்ட்லேண்ட் விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில், கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானம் தரையிறங்க இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில், விமானத்திற்குள் பதற்றமான சூழல் உருவானது.

இந்நிலையில், அதே விமானத்தில் பயணம் செய்திருந்த மருத்துவப் பணியாளர்கள் (Paramedics) உடனடியாக செயல்பட்டு, அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவி செய்து விமானத்திலேயே பிரசவம் நடத்தினர்.

அனைவரின் பிரார்த்தனைகளும் நம்பிக்கைகளும் மத்தியில், விமானம் தரையிறங்குவதற்கு முன்பே அழகான குழந்தை ஒன்று பிறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
153 பயணிகளுடன் புறப்பட்ட அந்த விமானம், தரையிறங்கும்போது 154 பயணிகளுடன் போர்ட்லேண்ட் விமான நிலையத்தை அடைந்தது.

தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாகவும், சரியான நேரத்தில் உதவி செய்த மருத்துவப் பணியாளர்களுக்கு பல தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 929114

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time