உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் புகைப்படத்தை வெளியிட்ட டொனால்ட் ட்ரம்ப்.!!!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடன் கூடிய இரவு விருந்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், அந்த நபர் கைது செய்யப்படுவதற்கு முன்பு பாதுகாப்புச் சோதனைச் சாவடியைத் தாண்டி ஓடிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் காணொளியையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து தற்போது நடைபெறும் வெள்ளை மாளிகை ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்ட நபர் பல்வேறு ஆயுதங்களை வைத்திருந்ததாகவும், அவர் அமெரிக்காவின் California மாநிலத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்தார்.

“இவ்வாறான குண்டர்கள் மற்றும் மோசமான மனிதர்கள் நிகழ்வுகளின் போக்கை மாற்ற அனுமதிக்க மாட்டேன். இது முதல் முறை அல்ல; குடியரசுக் கட்சி (Republican Party) சார்ந்தவர்கள் முன்பும் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர்,” எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாகவும், ஆனால் அவர் அணிந்திருந்த குண்டுத் துளைக்காத கவச உடை காரணமாக உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மிகவும் சக்திவாய்ந்த துப்பாக்கியால் மிக அருகிலிருந்து அந்த அதிகாரி சுடப்பட்டார். இருப்பினும் அவர் அணிந்திருந்த கவச உடை தனது கடமையைச் சிறப்பாக செய்தது. நான் அந்த அதிகாரியுடன் பேசினேன்; அவர் தற்போது நலமாக இருக்கிறார்,” என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 929114

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time