வெள்ளை மாளிகையில் பிரித்தானிய மன்னர் சார்லஸ் – ஜனாதிபதி ட்ரம்ப் முக்கிய சந்திப்பு.!!!
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் நேற்று (27) சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
அட்லாண்டிக் கடலை கடந்த நாடுகளுக்கிடையிலான அரசியல் மற்றும் இராஜதந்திர உறவுகள் குறித்து முக்கியமான சூழ்நிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த மன்னர் சார்லஸை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பாரியார் அரச மரியாதையுடன் உத்தியோகபூர்வமாக வரவேற்றனர்.
இரு தலைவர்களும் பின்னர் தனிப்பட்ட சந்திப்பிலும் விரிவான கலந்துரையாடலிலும் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக ஒத்துழைப்பு, பாதுகாப்பு கூட்டுறவு, சர்வதேச அரசியல் நிலவரங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட காலத்திற்குப் பிறகு பிரித்தானிய மன்னர் ஒருவர் வெள்ளை மாளிகையை உத்தியோகபூர்வமாகப் பார்வையிடுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனால் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இடையிலான பாரம்பரிய இராஜதந்திர உறவுகள் மேலும் வலுப்பெறும் என அரசியல் வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.





