உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
அமெரிக்கா – ஈரான் பதற்றம்: போர் பாதையா அல்லது சமாதான வாய்ப்பா.???
Print
காத்தான்குடி கடற்கரையில்: பொதுச் சொத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் சமநிலை அவசியம்.!!!

Share :

அமெரிக்க இராணுவ ஆள்சேர்ப்பில் புதிய மாற்றம்: தானியங்கி பதிவு நடைமுறை.!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல தசாப்தங்களுக்குப் பிறகு அமெரிக்காவின் இராணுவக் கட்டாய ஆள்சேர்ப்பு முறையில் முக்கியமான மாற்றம் ஒன்றை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இராணுவ சேவைக்குத் தகுதியான இளைஞர்கள் இனி தானாகவே (Automatic) பதிவு செய்யப்படும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டப்படி, 18 முதல் 25 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண்களும் ‘தேர்வு சேவை அமைப்பு’ (Selective Service System) மூலம் தங்களாகவே முன்வந்து பதிவு செய்வது கட்டாயமாகும்.

எனினும், எதிர்காலத்தில் இந்த பதிவு செயல்முறை தானியங்கி முறையில் மேற்கொள்ளப்படும் வகையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாற்றம் தொடர்பான விவரங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் விரைவில் மேலதிக அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 760224

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time