உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

3,000 வாகனங்களுடன் கடலில் பற்றி எரியும் சரக்குக் கப்பல்; 22 பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்.!!!

அலாஸ்காவில் உள்ள எலூடியன் தீவுகளுக்கு அருகில் கடலில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்தக் கப்பல் 800 மின்சார கார்கள் உட்பட 3,000 வாகனங்களை மெக்சிகோவிற்கு ஏற்றிச் சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கப்பலின் தீயணைப்பு அமைப்பைப் பயன்படுத்தி அவசரகால தீயணைப்பு நடைமுறைகளை கப்பலின் பணியாளர்கள் தொடங்கிய போதிலும், அவர்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதன் விளைவாக, கப்பலின் 22 பணியாளர்கள் கப்பலை கைவிட்டு உயிர்காக்கும் படகுகளில் தப்பிச் சென்றனர்.

வடக்கு பசிபிக் பெருங்கடலில் பயணித்த ஒரு வணிகக் கப்பலால் பணியாளர்கள் மீட்கப்பட்டனர்.

2023 ஆம் ஆண்டில், இதேபோன்று ஜெர்மனியில் இருந்து சிங்கப்பூருக்கு கிட்டத்தட்ட 500 மின்சார கார்கள் உட்பட 3,000 கார்களை ஏற்றிச் சென்ற கப்பல் தீப்பிடித்து எரிந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810376

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time