உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
அமெரிக்கா – ஈரான் பதற்றம்: போர் பாதையா அல்லது சமாதான வாய்ப்பா.???
Print
காத்தான்குடி கடற்கரையில்: பொதுச் சொத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் சமநிலை அவசியம்.!!!

Share :

ஹோர்முஸ் நீரிணையில் திடீர் தாக்குதல்: எண்ணெய் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு.!!!

மத்திய கிழக்கின் முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் திடீர் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்று சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த கடல்சார் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பான UK Maritime Trade Operations (UKMTO) வெளியிட்ட தகவலின்படி, ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இரண்டு சிறிய படகுகளில் வந்திருந்த தாக்குதலாளர்கள் எந்தவித முன் எச்சரிக்கையும் இன்றி இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பாதுகாப்பு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தாக்குதலுக்குள்ளான கப்பல்களும் அவற்றில் இருந்த பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும், உயிரிழப்பு அல்லது பெரிய அளவிலான சேதம் எதுவும் பதிவாகவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் சம்பவம், ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் தனது கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாம் என அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், அந்தப் பகுதியில் பாதுகாப்பு நிலைமை குறித்து சர்வதேச ரீதியில் அச்சம் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 765182

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time