உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

ஈரான் தாக்குதல் நடத்தினால் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் பதிலடியாக ஏவப்படும் – டிரம்ப் எச்சரிக்கை.!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னை படுகொலை செய்யவோ அல்லது அதற்கான முயற்சியில் ஈரான் ஈடுபட்டால், அந்நாட்டின் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் ஏவப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “அமெரிக்காவின் தற்போதைய அதிபரான என்னை படுகொலை செய்யவோ அல்லது அதற்கான முயற்சியில் ஈரான் அரசு ஈடுபட்டால், ஈரான் இஸ்லாமியக் குடியரசை நோக்கி 1,000 ஏவுகணைகள் ஏற்கனவே குறிவைக்கப்பட்டு ஏவுவதற்கு தயாராக உள்ளன. அதனைத் தொடர்ந்து உடனடியாக மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் ஏவப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதற்கான உத்தரவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் ஒரு ஆண்டு காலம் அல்லது அதற்கு மேல் கூட நீடிக்கக்கூடிய வகையில், ஈரானின் பல்வேறு பகுதிகளை முழுமையாகத் தாக்கி செயலிழக்கச் செய்ய அமெரிக்க ராணுவம் தயாராகவும், அதற்கான முழுத் திறனுடனும் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் இந்தக் கருத்து, அமெரிக்கா–ஈரான் உறவுகளில் நிலவும் பதற்றம் தொடரும் நிலையில் வெளியாகியுள்ளதால், சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066928

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time