உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

சவூதி, குவைத் அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பை நிறுத்தியதால் ட்ரம்பின் திட்டம் தோல்வி – சர்வதேச பதற்றம் அதிகரிப்பு.!!!

சவூதி அரேபியாவும் குவைத்தும் தங்கள் தளங்கள், வான்வெளி மற்றும் வான்வழிப் பயணங்களுக்கான அமெரிக்க இராணுவ அணுகலை இடைநிறுத்தியதை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்த “புராஜெக்ட் ஃப்ரீடம்” திட்டம் தோல்வியடைந்ததாக என்பிசி நியூஸ் மற்றும் பத்திரிகையாளர் ரியான் கிரிம் தெரிவித்துள்ளனர்.

இளவரசர் முகமது பின் சல்மான், இளவரசர் சுல்தான் விமானத்தளத்திலிருந்து அல்லது சவூதி வான்வெளி வழியாக அமெரிக்கா விமானங்களை இயக்குவதை தடை செய்ததாகவும், இதன் மூலம் அந்த இராணுவ நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பயணத்தில் இருந்த கப்பல்களை பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த வான் பாதுகாப்பு அமைப்பும் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ட்ரம்ப், தமது “புராஜெக்ட் ஃப்ரீடம்” திட்டத்தை முன்னதாகவே சமூக ஊடக தளமான “ட்ரூத் சோஷியல்” மூலம் அறிவித்தது, சவூதி தரப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கடும் கோபமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நடவடிக்கை தொடங்கிய பின்னரே ட்ரம்ப் சவூதி தரப்பை தொடர்பு கொண்டதால், கத்தார் மற்றும் ஓமான் நாடுகளும் அதிர்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ட்ரம்ப் மற்றும் பட்டத்து இளவரசர் இடையே நடைபெற்ற நேரடி தொலைபேசி உரையாடலும் நிலைமையை சீரமைக்கத் தவறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 929118

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time