உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

உதயநிதி ஸ்டாலின் கைது; நீலாங்கரை இல்லம் முன்பு பொலிஸ் குவிப்பு.!!!

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (04) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரங்களை முன்னிறுத்தி தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அவரது உரையில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, தவெக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை வெளியிட்டனர்.

இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக, உதயநிதி ஸ்டாலினை கைது செய்வதற்காக இன்று காலை சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள அவரது இல்லம் முன்பு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர். பின்னர் திமுக நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருடன் பொலிஸார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

இந்த கைது தொடர்பான மேலதிக சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1067001

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time