உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

இந்திய சுரங்கத்துறை பிரதிநிதிகள் இலங்கை விஜயம்; முதலீடுகள், ஒத்துழைப்பு வாய்ப்புகள், கூட்டு முயற்சிகள் குறித்து ஆராய்வு.!!!

இந்திய அரசின் சுரங்க அமைச்சு தலைமையிலான பிரதிநிதிகள் குழு சுரங்கங்கள் மற்றும் கனியவளத் துறையில் சாத்தியமான ஒத்துழைப்புகளை ஆராய்வதற்காக இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்தியாவின் முன்னணி அரச சுரங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் இதில் பங்கேற்றிருந்தனர்.

மே 20 – 22 வரை இடம்பெற்ற இந்த விஜயத்தின் போது, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியைச் சந்தித்த , Kahatagaha Graphite Lanka Ltd., Lanka Mineral Sands Ltd., புவிச்சரிதவியல் அளவை மற்றும் (GSMB), and Lanka Phosphate Ltd. உள்ளிட்ட இலங்கை அரசுக்குச் சொந்தமான கனியவள நிறுவனங்களின் (SOEs) தலைவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர். முதலீட்டு சபை (BOI) பணிப்பாளர் நாயகம் மற்றும் அரசின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடனும் சந்திப்புகள் இடம்பெற்றிருந்தன.

முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்தல், சுரங்க தொழில்நுட்பங்களில் நவீன தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் கனியவளத் துறையில் பெறுமதிசேர் கூட்டு

இந்தியாவின் முன்னணி அரச சுரங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் இதில் பங்கேற்றிருந்தனர்.

மே 20 – 22 வரை இடம்பெற்ற இந்த விஜயத்தின் போது, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியைச் சந்தித்த இப் பிரதிநிகள் , Kahatagaha Graphite Lanka Ltd., Lanka Mineral Sands Ltd., புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் (GSMB), and Lanka Phosphate Ltd. உள்ளிட்ட இலங்கை அரசுக்குச் சொந்தமான கனியவள நிறுவனங்களின் (SOEs) தலைவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர். முதலீட்டு சபை (BOI) பணிப்பாளர் நாயகம் மற்றும் அரசின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடனும் சந்திப்புகள் இடம்பெற்றிருந்தன.

முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்தல், சுரங்க தொழில்நுட்பங்களில் நவீன தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் கனியவளத் துறையில் பெறுமதிசேர் கூட்டு முயற்சிகள் குறித்து கலந்துரையாடுதல் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இந்திய அரசின் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணையமைச்சர் ஸ்ரீ சதீஷ் சந்திர துபே மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோருக்கு இடையே கனியவளத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து 2025 பெப்ரவரி 15 அன்று புதுடில்லியில் நடைபெற்ற சந்திப்பின் அடிப்படையில் இந்த விஜயம் அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து, 2025 மார்ச் 10 அன்று இந்திய அரசின் சுரங்க அமைச்சகச் செயலாளருக்கும், இலங்கை அரசின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கும் இடையே ஒரு மெய்நிகர் சந்திப்பும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செயற்பாட்டு தோற்றப்பாடுகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான பகுதிகளை ஆராய்வதற்காக இப்பிரதிநிதிகள் இலங்கையில் உள்ள முக்கிய சுரங்க வளாகங்களுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810405

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time