உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முதலீட்டு நட்பு கொள்கை.!!!

சர்வதேச வர்த்தக மையத்தின் (ITC) நிறைவேற்றுப் பணிப்பாளர் பமீலா ரோஸ்மேரி கோக்-ஹமில்டன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று கடந்த 12ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில், டிஜிட்டல் பரிவர்த்தனை, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் அபிவிருத்தி மற்றும் பெண்களின் பொருளாதார வலுவூட்டல் உள்ளிட்ட முக்கிய பொருளாதார முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், டிஜிட்டல் மயமாக்கல், சந்தை அணுகலை வலுப்படுத்துதல் மற்றும் நிறுவன கட்டமைப்பின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை (SMEs) விரிந்த பொருளாதாரத்தில் ஒருங்கிணைத்தல், பொருளாதாரத்தில் இளைஞர் சமூகம் மற்றும் பெண்களின் அதிக பங்கேற்பு மற்றும் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முதலீட்டு நட்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்துதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

சுற்றுலா, ஏற்றுமதி, எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) போன்ற முக்கிய துறைகளை கண்டறிந்து கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் வலியுறுத்தினார்.

சேதன பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு சர்வதேச வர்த்தக மையம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) உடனான கூட்டாண்மையை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

ஜூலை மாதம் நடைபெறவுள்ள உலகளாவிய மாநாட்டில் இலங்கை பங்குபற்றவுள்ள நிலையில், இச்சந்திப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் பொருளாதார விவகார (இருதரப்பு) பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் தர்ஷன எம். பெரேரா உட்பட ஐ.நா. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810638

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time