உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

முட்டை ஒன்றின் விலை – 70 ரூபாவாக உயர்வடையும் அபாயம்.!!!

● வெள்ளத்தில் உயிரிழந்த 28 இலட்சம் கோழிகள்.

நாட்டில் ஏற்பட்ட பெரும் அனர்த்தத்தினால் எதிர்வரும் பண்டிகைக் காலப்பகுதியில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு உருவாகும் அபாயம் இருப்பதாக அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

சமீபத்தில் நிலவி வந்த கடும் மழை மற்றும் வெள்ளப் பேரழிவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த 28 இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளன. இதனால் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அடுத்த சில வாரங்களில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக உயர்வடையும் அபாயம் உள்ளது. வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சிக்கும் தட்டுப்பாடு உருவாக வாய்ப்புள்ளது.” தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
உற்பத்தி பாதிப்புக்கு காரணமாக கால்நடை தீவனத்திற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை திடீரென அதிகரித்துள்ளது. இதனால் பண்ணை உரிமையாளர்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

கோழி இறைச்சி விலை தற்பொழுது குறைவாக இருந்தாலும், அடுத்த சில வாரங்களில் நிலைமை மாறக்கூடும் என்றும், வெள்ளத்தால் உயிரிழந்த கோழிகளை மனித நுகர்வுக்கு ஒருபோதும் பயன்படுத்துவதில்லை என்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சந்தை நிலைமை ஸ்திரப்படுத்தப்பட்டு, உற்பத்தி சீரான நிலையில் தொடர அரசு கால்நடை தீவன மூலப்பொருட்களை உடனடியாக இறக்குமதி செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பண்ணை உரிமையாளர்களுக்கு உதவித்தொகை வழங்கி அவர்களின் உற்பத்தியை மீள கட்டியெழுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 809979

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time